என்னைப்பற்றி சில வார்த்தைகள். ================================================
ருத்ரா இ.பரமசிவன்
நான் கல்லிடைக்குறிச்சியில் 1943ல் பிறந்தேன். தந்தை:பி.இசக்கி,தாய்:ஆவுடையம்மாள்.
தாமிரபரணி ஆறு தாலாட்டுப்பாடும் அந்த பொதிகைமலையடிவாரத்து ஊரில் 17 வயது வரை இருந்தேன்.அங்கு திலகர் வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியில் 1960ஆம் ஆண்டு பள்ளியிறுதிப்படிப்பை முடித்தேன்.பின்னர் 1964 ல் கோயமுத்தூர் பெரியநாயக்கன்பாளயம் திரு.ராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கல்லூரியில்பட்டப்படிப்பை (கூட்டுறவு இயல் மற்றும் பொருளாதாரம்)முடித்தேன்.கல்லூரி இறுதித்தேர்வில் முதலாவதாக தேர்ச்சி பெற்று மரியாதைக்குரிய நம் (முன்னாள்)இந்திய குடியரசு தலைவர் அவர்களால் தங்கப்பதக்கம் பரிசளிக்கப்பட்டேன்.அதன் பின்னர் 1966 ல் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (LIC of INDIA)பணிக்கு அமர்ந்தேன்.பொருளாதார பாடத்தில் நான் முதல் வகுப்பில் தேர்வு பெற்றிருந்ததால் "தேர்வு இல்லாமலேயே")(under Non-test-category)நேரடியாக LIC ல் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.அங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றினேன்.காப்பீட்டுப் பாடத்திலும் உயர் டிப்ளமாவான "Fellow of Insurance Institute of India" (FIII)லும் 1975 ஆம் ஆண்டு தேர்ச்சிபெற்றேன்.அதே ஆண்டில் பணியாற்றிக்கொண்டே தனிப்பட்ட முறையில் படித்து(private study)ஆந்திர பிரதேசத்தின் திரு.வெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் எம்.ஏ (பொருளாதாரம்) முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தேன்.
நான் இன்சுரன்ஸ் படிப்பில் எஃப்.ஐ.ஐ.ஐ தேர்வு பெற்றிருந்ததால் மதுரை இன்சுரன்ஸ் இன்ஸ்டியூட் வகுப்புகளுக்கு பாடம் எடுத்திருக்கிறேன்.எம் ஏ பொருளாதாரத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்ததால் மதுரை அருள்மிகு மீனாட்சி மகளிர் கல்லூரியில் அங்கு பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கு 1975 ல் ஒரு கௌரவ விரிவுரை (கெஸ்ட் லெக்ச்சர்) ஆற்றினேன்.தலைப்பு : எகனாமிக்ஸ் ஆஃப் ரோலிங் ப்ளான்.
1989-1993 ஆண்டுகளில் எல்.ஐ.சி யின் "இன்டெர்ணல் ஆடிட் டிபார்ட்மென்டில்" பணிபுரிந்தேன்.பிறகு 1999 வரை அலுவலக உதவி அதிகாரியாக பணிபுரிந்தபின் 1999 நவம்பர் மாதம் முதல் தேதி தன் விருப்ப ஓய்வு (Voluntary Retirement)பெற்றேன்.
எனக்கு 1968 செப்டெம்பர் 4 ஆம் தேதியில் திருமணம் நடைபெற்றது.எனது மனைவி திருமதி.கஸ்தூரி அவர்களும் BSNL ல் பணியாற்றிவிட்டு 2003 ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி விருப்பஓய்வு பெற்றார்கள்.எங்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள்.இப்போது இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்துடன் அன்பான எங்கள் பேரன் பேத்திகளுடன் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இருக்கிறார்கள்.மகள் மருமகன்,மகன் மருமகள் ஆகிய யாவருமே இங்கு கணினிப் பொறியியல் வல்லுநர்கள் தான்.நான் ஏற்கனவே குறிப்பிட்ட எங்கள் "விருப்ப ஓய்வு" எங்கள் பேரன் பேத்திகள் பிரசவத்தின் போது ஏற்பட்டது.பேரக்குழந்தைகளோடு எங்கள் வாழ்க்கைக்கு ஒரு முழுமையும் நிம்மதியையும் ஆனந்தத்தையும் தந்ததே அந்த "ஓய்வு"கள் தான்.
இதோ இப்போது என் மகன் இல்லத்தில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்ஸின் "தௌசண்ட் ஓக்ஸ்" நகரிலிருந்துகொண்டு இந்த "ப்ளாக்" மடலை உருவாக்கி இருக்கிறேன்.

______________________________________________________________________